ரசிகனின் மடல் - திரு. பார்த்திபன் அவர்களுக்கு
1. ரசிகனின் மடல் - திரு. பார்த்திபன் அவர்களுக்கு
இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு அல்ல, ஒவ்வொரு நொடியும் இயங்கும் பார்த்திபன் அவர்களுக்கு, உங்கள் தந்தை எழுதிக்கொள்வது.
குழப்பம் வேண்டாம்! என் பெயரும் இராதாகிருஷ்ணன் தான்.
உங்களுக்கு வயது வெறும் நம்பர் என்பதால் நீங்கள் எனக்கு நண்பர் ஆவீர்.
நண்பா, உங்கள் நகைச்சுவையை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த நான், ஒரு சமயத்தில் உங்கள் மேடைப்பேச்சுக்கும் ரசிகனானேன். பின்பு உங்களை தொடர்ந்து தொடர்ந்தேன்.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில்
'தலைப்பாய்' இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்பதில் தொடங்கி, இறுதி காட்சி வரை சிறப்பாய் இருந்ததைக்கண்டு வியந்து போனேன்.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் தலைப்பு வடிவமைப்பு, நீங்கள் வித்யாசமான சிந்தனை கொண்டவர் என்பதை பிரதிபலித்தது.
உங்கள் படங்களாகிய 'புதிய பாதை' 'பாரதிக்கு கண்ணம்மா' 'ஸ்வர்ணமுகி' படங்களை தேடி பார்த்து ரசித்திருக்கிறேன். 90 களில் பிறக்காமல் 80 களில் பிறந்திருந்தால், உங்களின் முந்தைய படங்களையும் திரையரங்கில் ரசித்திருப்பேனோ என்று தோன்றும்.
இப்பொழுது பல தொழில்நுட்ப உதவியுடன், சிறந்த திரைக்கதையுடன், 'ஆயிரம் தான் இருந்தாலும்' , ‘Tired - Retired’ போன்ற வசனங்களுடன், உங்கள் வாழ்க்கைப்பாதையில் தொலைத்த ஒற்றைச்செருப்பை கண்டு பிடித்துவிட்டீர்கள்.
இனி உங்கள் செருப்பையும் (படங்களையும்)
உங்களையும்
தொலைக்க தமிழ் சினிமா இடம் அளிக்காது.
உங்கள் பேச்சுக்களை கேட்ட நான், அலுவலகத்தில் புதிதாய் வேளைக்கு சேர்ந்தவர் “என்னை groom செய்யுங்கள்” என்று சொல்லும் போது, அவர் புதிதாய் திருமணமானவர் என்பதால், “நீங்கள் தான் ஏற்கனவே groom ஆகிவிட்டீர்களே” என்று சொல்லத்தோன்றும்.
விஜய் அவர்களுக்கு பத்து கதை வைத்திருக்கும் நீங்கள், ரஜினி அவர்களை இயக்க வேண்டும் என்பது எனது வித்தியாசமான ஆசை. உங்களிடமிருந்து வித்தியாசமானதை எதிர்பார்ப்பது தானே சரி!
என் எண்ணங்கள் தான் இம்மடல்!
இனி நீங்களும் என் ரோல் மாடல்.
உங்கள் வெற்றிப்பயணம் இனியும் வித்தியாசமாக தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு இராதாகிருஷ்ணன்.
இனி கொண்டாடப்படுவதற்கு பார்த்திபன்.
Comments
Post a Comment
Your feedback pls